Home » , , » ஸ்ரீலங்கா சு. கட்சியும் ஐ.தே.கவும் ஜே.வி.பி யும் யாழில் வேட்புமனு தாக்கல்

ஸ்ரீலங்கா சு. கட்சியும் ஐ.தே.கவும் ஜே.வி.பி யும் யாழில் வேட்புமனு தாக்கல்

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் வேட்பு மனுவினை பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய ஆகியன இன்று காலை தாக்கல் செய்துள்ளன.
இன்று காலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிறேமஜெயந் தலைமையில் அமைச்சர் டக்ளஸ் மற்றும் அங்கஜன் ஆகியோர் சகிதம் பல வண்டிகளில் வந்திறங்கிய அரசாங்க ஆதரவாளர்கள் சகிதம் வேட்பு மனுவினை அரசாங்கம் தாக்கல் செய்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம் .சுவாமிநாதன் தலைமையில் முதன்மை வேட்பாளர் துவாரகேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்களும் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தனர்.

இதேவேளை ஜே.வி.பி யும் இன்று வேட்பு மனுவினைத் தாக்கல் செய்துள்ளது. ஜே.வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹேந்துநெத்தி தலைமையில் இந்த வேட்பு மனுத்தாக்கல் இடம்பெற்றது.

இதனைத் தவிர மேலும் ஒரு சுயட்சைக்குழுவினரும் தேர்தலுக்கான வேட்பு மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்.






0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com