வவுனியாவில் ஜே.வி.பி., ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு,முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புதன்கிழமை நண்பகல் வரை தமதுவேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
காலை 10.30 மணிக்கு ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநயக்க தலைமையில் வேட்பு மனுவினை ஜே.வி.பி. தாக்கல் செய்திருந்தது.
இதேவேளை மதியம் 12 மணிக்கு வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளத்தில் இருந்து ஊர்வலமாக வருகை தந்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் வவுனியா மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
வவுனியாவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக போட்டியிடும் தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் தலைமையில் வருகை தந்திருந்த இவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தலைமை வேட்பாளரான சிறி ரெலோவின் தலைவர் ப.உதயராசா மற்றும் முத்து முகமது ஆகியோருடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இதேவேளை மதியம் 1.30 மணியளவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அதன் செயலாளர் ஹசன் அலி தலைமையில் வவுனியாவிற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தது.இதன்போது வவுனியா சார்பில் போட்டியிடவுள்ள 9 வேட்பாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

.png)
+-+Copy.png)

0 comments:
Post a Comment