இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி 12 மணி வரை அரசியல் கட்சிகள் தமது மனுக்களை தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி மதியம் 12 மணிவரை சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணத்தினை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தேர்தல் இடம்பெறும் தினம் குறித்து தேர்தல்கள் செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்படும்.
வேட்பு மனுத்தாக்கல்களின் போது குறிப்பாக வட பிராந்திய தெரிவத்தாட்சி காரியாலங்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படவுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் நீதவான்களின் அளித்த தீர்ப்புக்கள் குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் - எஸ்.எம். சந்திரசேன
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நீதவான்கள் கடந்த காலங்களில் அளித்த தீர்ப்புக்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டுமென பிரதிப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அளித்த வழக்குத் தீர்ப்புக்கள் குறித்து மீளாய்வு செய்ய வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரியுள்ளேன்.
தேர்தலில் போட்டியிடும் நீதவான்கள் நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்கள் அளித்த தீர்ப்புக்களில் அரசியல் நடவடிக்கைகள் கலந்திருக்கலாம்.
ஓர் கட்சியில் வேட்பாளராக போட்டியிட வேண்டுமாயின் நீண்ட கால அடிப்படையில் அந்த கட்சியுடன் தொடர்புகளைப் பேண வேண்டியது அவசியமானது.
சில நீதவான்களுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதன் மூலம் இந்த விடயம் புலனாகியுள்ளது என பிரதி அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment