இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன், செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, கிருஷ்ணபிள்ளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன். ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், கருணாகரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் நியமனக் குழுவும், நிதிக்குழுவும் பிரச்சாரக்குழுவும் நியமிக்கப்பட்டது. பின்னர் வடமாகாண தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சம்பந்தமாக நீண்டநேரம் ஆராயப்பட்டது. முன்னாள் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பின் சார்பில் களமிறக்கவேண்டும் என்று இரா.சம்பந்தன் முன்மொழிந்ததுடன். அவரையே நியமிக்கவேண்டுமென ஆணித்தரமாக கூறிநின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளையில், ஏனைய கட்சிகளைச் சேர்ந்த பிரதநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டும் என்று கோரிநின்றதுடன் தங்களுடைய கோரிக்கையை ஆதரித்து கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக முன்வைத்தனர். இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பின் சார்பில் யாரை நிறுத்துவது என்று ஏகமனதாக முடிவெடிக்கமுடியாமையினால் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்றுவரை பிற்போடப்பட்டது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment