Home » , , » வடமாகாணசபைத் தேர்தல் நீதி, நியாயமாக நடத்தப்படவேண்டும்: ஜானாதிபதியிடம் சம்பந்தன் வலியுறுத்தல்

வடமாகாணசபைத் தேர்தல் நீதி, நியாயமாக நடத்தப்படவேண்டும்: ஜானாதிபதியிடம் சம்பந்தன் வலியுறுத்தல்

வடமாகாணசபைத் தேர்தல் நீதி, நியாயமாக நடத்தப்படவேண்டும். இதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும் என்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவிடம் தமிழ தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேரில் வலியுறுத்தியுள்ளார்.


ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்றுக்காலை ஜனாதிபதியை அலரிமாளிகையில் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். காலை 8.45 மணி முதல் 10.15 மணிவரை இந்தச் சந்திப்பு இடம் பெற்றது. இதன் போதே நீதி நியாயமான தேர்தலின் அவசியம் குறித்து சம்பந்தன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது வடமாகாணசபை தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன் போது கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், வடமாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வந்தமை வரவேற்கத்தக்கது. ஆனால் மாகாணசபைத் தேர்தலை நீதி நியாயமாக நடத்தவேண்டியது இன்றியமையாததாகும் என்று வலிறுத்தி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com