Home » , » வாக்களிக்க வேண்டாம் தமிழ் மக்களுக்கு வடக்கில் இராணுவம் எச்சரிக்கை.

வாக்களிக்க வேண்டாம் தமிழ் மக்களுக்கு வடக்கில் இராணுவம் எச்சரிக்கை.

வடக்கு மாகாகண சபைத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதன் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தும் செய்றபாடுகளில் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர் என கூட்டமைப்பின் வேடபாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 குறிப்பாக கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கும் அவர்களுக்காக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற பிரதேச மட்டச் செயற்பாட்டாளர்களுக்கு இராணுவம் மிகக்கடுமையான அச்சுறுத்தல்களைப் பிரயோகிப்பதாகத் தெரிவிக்கின்ற வேட்பாளர்கள், இதனால் தம்முடன் தமிழ் மக்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கதைக்க அஞ்சுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

 மேலும், இத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிவாய்ப்பினை குறைப்பதற்காக சிங்களத்தால் களமிறக்கப்பட்டுள்ள சுயேட்சைக்குழுவின் வேட்பாளர்கள் தமக்கும் அச்சுறுத்தல் இருப்பது போன்ற மாயத்தோற்றத்தினை வெளிக்காட்டி உண்மையை மறைக்க முற்படுகின்றனர் எனவும் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 தமிழ் மக்களின் வாக்களிப்பு விகிதம் அதிகரிக்கின்ற சந்தர்பத்தில் கூட்டமைப்புக்கான வெற்றிவாய்ப்பும் அதிகரிக்கும் என்ற நிலையில் தமிழ் மக்களை வாக்களிக்காமல் தடுப்பதற்கான உத்திகளையும் சிங்களம் வடக்கில் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com