வடமாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 11 கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடவுள்ளன. ஒரு சுயேட்சைக் குழுவினுடைய வேட்புமனுநிராகரிக்கப்பட்டுள்ளது.
4 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 91 பேர் போட்டியிடுகின்றனர்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 11 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ள நிலையில் ஒரு சுயேட்சைக் குழுவினுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி போட்டியிடுகின்றார்.
ஆளும் ஐக்கிய முன்னணியின் சார்பிர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வை.தவநாதன் முதன்மை வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment