Home » » வடக்கு வடமேல், மத்திய மூன்று மாகாண சபைகளையும் ஐ.ம.சு.முன்னணியே கைப்பற்றும்

வடக்கு வடமேல், மத்திய மூன்று மாகாண சபைகளையும் ஐ.ம.சு.முன்னணியே கைப்பற்றும்

வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளிலும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் நேற்று தெரிவித்தனர். தேர்தலை எப்படியாவது வெல்லவன்றி கெளரவமாக வெற்றி பெறுவதையே விரும்புவதாக குறிப்பிட்ட அவர்கள் மூன்று மாகாண சபைகளையும் ஐ.ம.சு.மு. கைப்பற்றும் எனவும் தெரிவித்தனர்.

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர். ஐ.மு.சு. மு. சார்பில் பலமான வேட்பாளர் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் அனுமதியுடன் தனித்துப் போட்டியிடும் கூட்டுக் கட்சி உறுப்பினர்கள் தேர்தலின் பின் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவர் எனவும் குறிப்பிட்டனர்.

வடக்கில் தேர்தல் நடைபெறாது என வீண் புரளி கிளப்பியவர்களுக்கு வடக்கு தேர்தல் நடத்துவதன் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் வடக்கில் தேர்தல் நடத்துவதன் மூலம் அரசாங்கம் முதல் வெற்றியை பெற்றுள்ளதாகவும் கூறினர். இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம் ஜயந்த், டளஸ் அலஹப் பெரும மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர்.

அமைச்சர் நிமல்

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஐ.ம.சு.மு. பலமான வேட்பாளர்களை இறக்கியுள்ளது. சில கட்சிகள் எமது இணக்கத்துடன் தனித்து போட்டியிடுகின்றன. இது பிளவு அல்ல. தேர்தலின் பின் அவை எம்முடன் மீண்டும் இணைந்து செயற்படும்.

வடக்கில் தேர்தல் நடத்தப்படுவது குறித்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் அங்கு தேர்தல் நடத்துவதே எமக்குக் கிடைத்த வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கம் தொடர்பான தவறான கருத்துகள் மாறும். தேர்தலை தவறான வழியில் வெல்ல எமக்கு தேவை கிடையாது. மக்களின் எந்த முடிவையும் தலை சாய்த்து ஏற்க தயாராக உள்ளேன். இந்தத் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதே எமது இலக்காகும். சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

அமைச்சர் சுசில்

ஐ. ம.சு. மு. வுடன் 11 கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. வடக்கில் 100 க்கும் அதிகமான ஐ.ம.சு.மு. பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளனர். ஈ. பி.டி.பி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் எம்முடன் உள்ளன. எமக்கு வடக்கில் பலமான தளம் உள்ளது. இடதுசாரி கட்சிகளும் எம்முடனே உள்ளன.

25 வருடங்களின் பின்னர் நடைபெறும் வடக்கு தேர்தலில் 30 ற்கும் அதிகமான கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. வடக்கில் அநேகர் போட்டியிடுவது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். வடக்கில் ஒரு இராணுவ பங்கர் கூட கிடையாது. பொலிஸாரே பாதுகாப்பு கடமைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் சிலர் பொய் பிரசாரம் நடத்துகின்றனர். எமக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்குவதாக கூறப்படுவதில் உண்மை கிடையாது என்றார்.

அமைச்சர் மைத்திரிபால அமைச்சர் மைத்திரிபால சிரிசேன கூறியதாவது;

சுதந்திரமான தேர்தலை நடத்த சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும். எமக்கு இம்முறை தேர்தலில் எந்தவித சவாலும் கிடையாது. வடக்கிலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வன்முறைகளற்ற சுதந்திரமான தேர்தலை நடத்த சகல ஒத்துழைப்பும் வழங்குவோம். 9 மாகாணங்களில் வடக்கு கிழக்கிலே கூடுதல் அபிவிருத்தி இடம்பெறுகிறது. அங்குள்ள சில பகுதிகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போன்று முன்னேற்றமாக உள்ளன என்றார்.

அமைச்சர் டளஸ் அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கூறியதாவது,

மூன்று மாகாணங்களிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வடக்கிற்கு அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தும் மத்திய மாகாணத்திற்கு அமைச்சர் நிமல் சிரிபாலவும் வடமேல் மாகாணத்திற்கு அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட, தேர்தல் தொகுதி வாக்களிப்பு நிலையம் மற்றும் கிராம மட்டங்களிலும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வேறு மாவட்ட மக்களே குழுக்களுக்கு நியமிக்கப்பட் டுள்ளனர்.

இந்த தேர்தலை கெளரவமாக வெல்லவே விரும்புகிறோம். வடக்கில் தேர்தல் நடத்துவதன் மூலம் முதல் வெற்றியை பெற்றுள்ளோம். இது மிகவும் முக்கியமான விடயமாகும். இது குறித்து சர்வதேச சமூகத்தை அறிவூட்ட வேண்டும். தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை வட பகுதி மக்கள் பயன்படுத்த வேண்டும்.

கடந்த பொது தேர்தலில் எமக்கும் த. தே. கூ க்குமே வடக்கில் போட்டியிருந்தது. சிறு வித்தியாசத்திலே சில மாவட்டங்களில் ஐ.ம.சு.மு. தோற்றது. இம்முறை நாம் நம்பிக்கையுடனே போட்டியிடுகிறோம். இரண்டாவது சவாலையும் நாம் வெல்வோம் என்றார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com