தொடர்ந்து மங்கள விளக்கினை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய சுரேஸ் க.பிறேமச்சந்திரனும், கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவராகிய வீ.ஆனந்தசங்கரியும், கூட்டமைப்பின் வடமாகாணசபை கிளிநொச்சி மாவட்ட ஒரேயொரு பெண் வேட்பாளர் ஆசிரியை திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணமும், மற்றுமொரு வேட்பாளர் தர்மகுலசிங்கமும், கூட்டமைப்பின் வடமாகாணசபை முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர் ரவிகரனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் க.பிறேமச்சந்திரனின் பிரத்தியேகச்செயலாளர் உதயகுமாரும் (ரமேஸ்) ஏற்றி வைத்தனர்.
கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட தலைமைச்செயலகத்தின் பெயர்பலகையினை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் க.பிறேமச்சந்திரனும், ஈ.சரவணபவனும் திரைநீக்கம் செய்து வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் க.பிறேமச்சந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோருடன் வீ.ஆனந்தசங்கரியும் வழங்கினர்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment