Home » , , » வடமாகாணசபைத் தேர்தலுக்கான TNAயின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி

வடமாகாணசபைத் தேர்தலுக்கான TNAயின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி

வடமாகாணசபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள அதன் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர், ஏனைய வேட்பாளர்கள், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன என்று கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவித்தன.

 இதனிடையே யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களினில் தலா ஒன்று என 15 பாரிய கூட்டங்களை கூட்டவும் மக்களினை அணிதிரட்ட கிழக்கு மாகாணமுள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே மேடையினில் தோன்ற வைக்கவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com