Home » , » வடக்கில் இராணுவத்தின் தலையீட்டால் ஆயுத வன்முறைச் சம்பவங்கள் -கபே குற்றச்சாட்டு

வடக்கில் இராணுவத்தின் தலையீட்டால் ஆயுத வன்முறைச் சம்பவங்கள் -கபே குற்றச்சாட்டு

வடக்கில் தேவையற்ற சிறிலங்கா இராணுவத்தின் தலையீட்டால் அடுத்தடுத்து இரு ஆயுத வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு (கபே) குற்றம் சாட்டியுள்ளது.

இவற்றினை தடுத்து நிறுத்தவோ இல்லது நீதியினை நிலைநாட்டவோ காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவ்வமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கபே அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்ட கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோனே மேற்படிக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணசபை தேர்தல் கண்காணிப்பில் கபே அமைப்பு தற்போது ஈடுபட்டு வருகின்றது. இதனடிய்படையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இரண்டாவது முறையாகவும் ஆயுதம் சம்மந்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

முதலாவதாக ஆயுத வன்முறைச் சம்பவம் இடம்பெற்ற போதே காவல்துறையினர் உரிய நடவடிக்கையினை எடுத்திருந்தால் நிச்சையமாக சாவகச்சேரியில் ஆயுத வன்முறைச் சம்பவம் இடம்பெற்றிருக்காது.

இங்கு சிறிலங்கா இராணுவத்தின் தலையீடு அதிகமாக உள்ளது. இங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தமது முகாங்களுக்குள் இருப்பதே இல்லை.

அவர்கள் சிவில் நடவடிக்கைகளில் தலையிடுவதே வேலையாக அலைந்து திரிகின்றனர். இவர்களாலேயே அதிகளவு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றது.

இவ்விடையங்கள் தொடர்பாக கபே அமைப்பினால் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை தொடருமானால் வடமாகாணசபைத் தேர்தல் சுதந்திரமான தேர்தலாக நடைபெறும் என்று உறுதியாக கூறமுயாத நிலை எற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com