Home » , » தேர்தல் சட்ட மீறல்கள் எண்ணிக்கை 259 ஆக அதிகரிப்பு - முறைப்பாட்டு அலுவலகம்

தேர்தல் சட்ட மீறல்கள் எண்ணிக்கை 259 ஆக அதிகரிப்பு - முறைப்பாட்டு அலுவலகம்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல் செயலகத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் அதிகப்படியாக 68 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென தேர்தல் முறைப்பாட்டு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் 42 முறைப்பாடுகளும், மாத்தளை மாவட்டத்தில் 32 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

 அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் 39 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் முறைப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச ஊழியர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்வடைந்துள்ளது.

 இதனைத் தவிர அரச கட்டடங்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தவறான முறையில் பயன்படுத்தப்பட்டமை மற்றும் பிரசார பதாகைகள் காட்சிபடுத்தப்பட்டமை தொடர்பில் 45 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் வன்முறை தொடர்பிலும் 26 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் முறைப்பாட்டுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com