இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவது. தொழில்நுட்பம், ஆங்கிலம், உடற்கல்வி ஆகிய பாடங்களுக் கான சுமார் 70 பேருக்கு மேற்படி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நேற்று நண்பகல் 2 மணியளவில் யாழ்.கல்வித்திணைக்களத்தில் வடமாகண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியே மேற்படி நியமனக் கடிதங்களினை வழங்கிவைத்துள்ளார். இந்நிகழ்வானது வெளிப்படையாக நடாத்தாப்படாமல் இரகசியமான முறையில் நியமனக் கடிதங்கள் பெற்றுக் கொள்ள வேண்டியவர்களுக்கு அறிவித்து அவர்களை வரவளைக்கப்பட்டு நடாத்தப்பட்டுள்ளது.
வடமாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கையாகவே மேற்படி நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment