Home » , , » த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அடுத்தவாரம் ஆரம்பம்

த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அடுத்தவாரம் ஆரம்பம்

வடக்கு மாகாணசபை தேர்தலுக்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அடுத்த வாரத்தின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் 5 மாவட்டங்களிலும் பாரியளவு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உத்திகள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு செய்யப்பட்டு தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்து ஏனைய பெரிய கட்சிகள் தமது பிரசார நடவடிக்கைகளை அரம்பித்திருப்பதுடன், விளம்பரங்கள், சுவரொட்டிகள் போன்றவற்றையும் பிரசுரித்து வருகின்றன. எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்காத நிலையில் அடுத்த வாரத்தின் பிற்பகுதியில் பிரசார நடவடிக்கைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 இந்நிலையில், வடக்கின் 5 மாவட்டங்களிலும் சுமார் 15ற்கும் மேற்பட்ட பாரிய பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும், இந்தக் கூட்டங்கள் அனைத்திலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 மேலும் வடக்கு தேர்தலுக்கான கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாத பிற்பகுதியில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் எழுத்து மூலமாகவும், வாய்மொழி ஊடாகவும் பல விடயங்கள் கூட்டமைப்பு தலைமையின் கவனத்திற்குக் கொண்டுவரபபட்டுள்ள நிலையில், அவற்றில் மாகாணசபைக்குச் பொருத்தமானவற்றை விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com