Home » , , , » யாழ். சாவகச்சேரிப் பகுதியில் அங்கஜன் – சர்வானந்தன் குழுக்களுக்கிடையில் துப்பாக்கி மோதல்

யாழ். சாவகச்சேரிப் பகுதியில் அங்கஜன் – சர்வானந்தன் குழுக்களுக்கிடையில் துப்பாக்கி மோதல்

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில் ஒருவர் படுகயைமடைந்துள்ளார்.

அங்கஜன் இராமநாதன் குழுவிற்கும் சாவகச்சேரிப் பகுதி ஐ.ம.சு.கூ வேட்பாளர் சர்வானந்தன் குழுவிற்கும இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.

கொடிகாமம் பகுதியில் ஆரம்பித்த இச் சண்டை சாவகச்சேரிப் பகுதிவரை நடைபெற்றதாகத் தெரியவருகின்றது.

அங்கஜன் குழுவினர் சர்வானந்தா குழுவினர் இருந்த பகுதிக்குள் சென்ற போது மோதல் வெடித்துள்ளது.

சர்வானந்தனுக்கு சார்பாக இராணுவத்தினர் தொழிற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கஜனின் மெய்ப்பாதுகாவல் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையில் பொலிசாரும் இராணுவத்தினரும் குவிந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

சற்று நேரத்தின் முன் நடந்த சம்பவம் என்றபடியால் உறுதியான தகவல்கள் பெற முடியவில்லை.

அங்கஜன் – சர்வானந்தா மோதலின் போது அங்கஜன் குழுவினர் சர்வானந்த குழு மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியதாகவும் இதில் சர்வானந்தின் மச்சான் படுகாயமடைந்ததாகவும் அத்துடன் சர்வானந்தா குழுவின் தாக்குதலில் விக்கி மாஸ்டர் எனப்படும் அங்கஜனின் அடியாள் தலையில் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஆளுங்கட்சியின்  இந்தச் செயல்களினால் குடாநாட்டு இயல்பு வாழ்க்கை குழப்பமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com