வடக்கு தேர்தலில் றெமீடியஸ், சீராஸ் உள்ளிட்ட நான்கு வேட்பாளர்களை யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகம் தெரிவு செய்து தேர்தலில் களமிறக்கியுள்ளது.
இவர்களை வெல்ல வைப்பதற்கான முயற்சிகளிலும் இராணுவம் கடும் முனைப்புடன் செயற்படுகின்றது.
குறிப்பாக தீவுப் பகுதியில் றெமீடியஸின், விளம்பர சுவரொட்டிகளை சிவில் உடையில் இராணுவத்தினரே ஒட்டி வருகின்றனர்.
மேலும் வீதிகள் முழுவதும் குறித்த வேட்பாளரின் பெயரை நள்ளிரவு 12மணி முதல் அதிகாலை வரை இராணுவமே எழுதி வருகின்றது. இதனை பலர் அவதானித்திருக்கின்றனர்.
இதனைவிட றெமீடியஸிற்கு வாக்களிக்குமாறு சகல முன்னாள் போராளிகளுக்கும், இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த அடிப்படையில் தனக்கு 6ஆயிரம் வாக்குகள் உறுதியாக விழும் என குறித்த வேட்பாளர் தனக்கு நெருங்கிய சகாக்களுக்கு கூறியுள்ளார்.
இதேபோன்று சீராஸ் என்ற வேட்பாளர் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடையவர், இவரே வலிகாமம் வடக்கு பகுதியில் சீமெந்து தொழிற்சாலை, மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட கப்பல்களின் பாகங்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருபவர்.
இவர்கள் தவிர வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளிலுள்ள வேட்பாளர்கள் இருவரையும் இராணுவம் தமது முயற்சியில் வெற்றி பெறச் செய்வதற்கான முனைப்புக்களை காட்டி வருகின்றது.
இந்நிலையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இம்முறை அதிகளவு கள்ள வாக்குகளும், அதி களவு நிர்ப்பற்திக்கப்பட்ட வாக்குகளும் போடப்படும் என்பது ஓரளவு உறுதியாகியுள்ள நிலையில் இந்த விடயம் தமிழ் தேசியத்திற்கு மிக ஆபதான ஒன்றாகவும் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment