நவநீதம்பிள்ளைக்கும் தமிழ்க் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று காலை 8.15 மணியளவில் கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதன்போது கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நவநீதம்பிள்ளையுடனான இன்றைய சந்திப்பின்போது வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புகளினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை, காணாமல்போனோர், சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தொடர்பான விவரங்கள் உட்பட பல விடயங்கள் அடங்கிய அறிக்கையான்றை அவரிடம் கையளிக்கவுள்ளோம் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் இன்று அவர் சந்திக்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது. கடந்த 25ஆம் திகதி இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதி உட்பட வடக்கு, கிழக்கின் பல பிரதேசங்களுக்கு நேரில் சென்று பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தி தரவுகளைத் திரட்டியிருந்தார்.
நாளை சனிக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திவிட்டு ஜெனிவா புறப்படும் அவர், எதிர்வரும் செப்டெம்பர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக் கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரில் தனது இலங்கை பயணத்தின் போது திரட்டப்பட்ட தரவுகள் தொடர்பில் அறிக்கையயான்றை சமர்ப்பிக்கவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment