வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களோ, முரண்பாடுகளோ இதுவரைக்கும்
எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் பதிவு செய்யப்படவில்லை என யாழ்.பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளனவா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய பொழுது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் குழப்பங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம். தரம் –5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சை, உயர்தர மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சை, நல்லூர் உற்சவ காலம் மற்றும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இவை எல்லாம் ஒரே நேரத்தில் வருவதனால் பொலிஸார் அதிகமானோர் கடமைக்குத் தேவையாகவுள்ளது.
இருப்பினும் எம்மிடம் உள்ள ஆளணியைக் கொண்டு நாம் கடமைகளைப் பிரித்துக்கொடுத்துள்ளோம்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெறவாய்ப்புள்ளமையினால் பொலிஸாரை யாழ்.மாவட்டச் செயலகத்தைச் சுற்றிக் கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம். அதேபோன்று பல சோதனைச் சாவடிகளையும் புதிதாக அமைத்துள்ளோம்.
மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுவர்.
யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் காலத்தில் ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கென விசேட பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளோம். அப் பிரிவுக்குத் தொலைத் தொடர்பு வசதிகளையும் இலகுபடுத்திக் கொடுத்துள்ளோம் என்றார்.

.png)
+-+Copy.png)

0 comments:
Post a Comment