Home » , » யாழில் ஆளும் கட்சி வேட்டாளர்கள் 5000 ரூபா கள்ள நோட்டுக் கொடுத்து தங்களுக்கு வாக்களிக்குமாறு வீட்டின் உரிமையாளர்களிடம் கோரிக்கை

யாழில் ஆளும் கட்சி வேட்டாளர்கள் 5000 ரூபா கள்ள நோட்டுக் கொடுத்து தங்களுக்கு வாக்களிக்குமாறு வீட்டின் உரிமையாளர்களிடம் கோரிக்கை

யாழ்.மாவட்டத்தில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா சுகந்திரக் கட்சி வேட்பாளர் ஒருவர் யாழ்.நகரப் பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு சில போலியான 5000 ரூபா தாள்களை வழங்கி தனக்கு வாக்களிக்குமாறு கோரியதாக தெரியவருகின்றது. 

 யாழ்.பாசையூர் பகுதியைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணியான றெமிடியஸ் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்களை வீடு வீடாகச் சென்று வீட்டின் உரிமையாளர்களுடன் கதைத்து விட்டு விட்டின் உரிமையாளரின் கைகளைப் பற்றிப் பிடித்து இந்த 5000 ரூபா நோட்டுக்களை வைத்து தனக்கு வாக்களிக்குமாறு கோரியதாக தெரியவருகின்றது.

 உண்மையில் இது கள்ளநோட்டா நல்ல நோட்டா? என்பது வீட்டின் உரிமையாளருக்கு தெரியாத நிலையில் கடை ஒன்றில் மாற்றிய போது இது கள்ள போலியான 5000 ரூபா தாள் எனத் தெரியவந்துள்ளது.

இவ்விதமாக மோசடியான நிலையில் வாக்கு சேகரிப்பதற்காக இந்த நடவடிக்கையில் ஆளும் கட்சி வேட்பாளர்கள் சிலர் செயற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com