முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த வட மாகாணமே எமக்கு வேண்டும். பிரிவினை வாதத்தினை நாம் தோற்றுவிக்கவும் இல்லை பிரிவினைக்கு இடமளிக்கப்போவதுமில்லை என பொதுபலசேனா தெரிவித்துள்ளது. மேலும் விக்கினேஸ்வரனின் திட்டம் ஒரு போதும் பலிக்கப் போவதில்லை. தமிழர், முஸ்லிம்களை ஆதரிக்கும் அமைப்பாக நாம் செயற்பட்டு நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்போம் எனவும் அவ் அமைப்பினர் தெரிவித்தனர்.
பொதுபல சேனாவினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ் அமைப்பினர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் கருத்துத் தெரிவிக்கையில்,
பிரபாகரன் வடக்கின் தீவிரவாத முன்னணியாகவும் ருத்ரகுமாரன், அன்டன் பாலசிங்கம் ஆகியோர் புலம்பெயர் தமிழர் முன்னணியாகவும் செயற்பட்டுள்ளனர்.
அதே வழியில் இன்று நவநீதம்பிள்ளை சர்வதேசம் சார்பாகவும் விக்கினேஸ்வரன் பிரிவினை வாத முன்னணியாகவுமே செயற்படுகின்றனர்.
அன்று விடுதலைப் புலிகள் செய்ய முடியாததை இன்று நவிப்பிள்ளை, விக்கினேஸ்வரன் செய்ய முயன்றாலும் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.
மேலும் நாம் தமிழ், முஸ்லிம் மக்களை ஆதரித்தே செயற்படுகின்றோம். இலங்கையில் முஸ்லிம்கள் மீது சிறு காயத்தைக் கூட நாம் விளைவிக்கவில்லை. அதற்கான ஆதாரங்களும் உள்ளன.
அரேபிய நாடுகள் எமது பெளத்த அமைப்பிற்கும் இலங்கையின் பெளத்த மக்களுக்கும் கறுப்புச் சாயம் பூசி கிழக்கினை அரேபிய நாடாக மாற்ற நினைக்கின்றன.
சர்வதேச தீவிரவாதிகளும் இலங்கையில் உள்ள தீவிரவாத அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து கிழக்கு வாழ் முஸ்லிம்களை மட்டுமன்றி ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக மாற்றி நாட்டை சீரழிக்க நினைக்கின்றனர்.
மேலும் இலங்கையில் பெளத்த மதமும், பெளத்த மதக் கொள்கைகளும் அழிந்துகொண்டே செல்கின்றன.
அன்று எமது பெளத்த மதத்தைக் காப்பாற்றிய தர்மபாலவைப் போன்று இன்றும் லட்சக்கணக்கான தர்மபாலாவை உருவாக்க வேண்டும் எமது கொள்கைகளுக்காகவும் பெளத்தர்கள் வாழ வேண்டும்.
எனவே எதிர்காலத்தில் அனைத்து பெளத்த அமைப்புக்களையும் ஒன்றிணைத்து அந காரிக தர்மபாலவின் கொள்கையுடைய பெளத்தர்களை உருவாக்கி நாட்டில் உள்ள தீவிரவாதத்தினை அழித்துக்காட்டுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment