Home » , » மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன

மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன

மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

 இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தடை செய்யப்படுவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.

 மேலும் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு, தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி அலுவலகங்களையும் நாளை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் அகற்றுமாறு தேர்தல்கள் செயலகம் பணித்துள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com