கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது
இந்தத் தேர்தல் ஊடாக அரசாங்கத்தை மாற்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். ஆனால் இந்தத் தேர்தல் ஊடாக மக்களுக்கு சிறந்த மற்றும் வலுவான செய்தி ஒன்றை விடுக்க முடியும்.
எனவே ஐக்கிய தேசிய கட்சியினரும் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களும் அரசாங்கத்துக்கு இந்த தெளிவான செய்தியை விடுக்க முன்வரவேண்டும்
இதேவேளை வடக்கில் அரசாங்கம் அரச வளங்களைப் பயன்படுத்தி தேர்தல் பிரசார வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றமை தெளிவாகின்றது. இந்தக் குற்றச்சாட்டை அரசியல் கட்சிகள் மட்டுமன்றி சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் முன் வைத்துள்ளன.
எனவே வடக்குத் தேர்தலானது நீதியாகவும் சதந்திரமாகவும் நடைபெறும் என்று எந்த வகையிலும் நம்பிக்கை வைக்க முடியாது. தற்போதைய நிலைமையிலேெயே இந்த விடயத்தை உறுதியாக கூற முடியும். அரச அதிகாரிகளை தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஆளும் கட்சி பயன்படுத்திவருகின்றது.
இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆனால் ஆளும் கட்சி இதனையே செய்துவருகின்றது. அந்த வகையில் வடக்கில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என்பதனை தற்போதே கூறுகின்றோம்.
இது இவ்வாறு இருக்க நாட்டு மக்கள் இன்று வாழ முடியாது திண்டாடி வருகின்றனர். தொழில்வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்பட்டாலும் மக்களின் வருமானம் அதிகரிக்கப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் ஒரு குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவாக 19000 ரூபா எனக் கூறப்பட்டது.
ஆனால் இன்று ஒரு குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவானது 44000 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. அந்த வகையில் மக்களின் தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. கடந்த சில வருடங்களாகவே அரச ஊழியர்களின் சம்பளம் உரிய முறையில் அதிகரிக்கப்படவில்லை. வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மட்டும் 6500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே வாழ்க்கைச் செலவை தாங்க முடியாது திண்டாடுகின்ற மக்கள் வாழ முடியாது அங்கலாய்க்கின்ற மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாக அரசாங்கத்துக்கு பலமான செய்தியை விடுக்கவேண்டும் என்று கோருகின்றோம்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment