நேற்று பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி மக்களின் மேம்பாட்டு செயற்பாடுகள் போன்றவற்றில் நாம் கடுமையாக உழைத்ததனூடாக வெற்றி கண்டிருக்கின்றோம். ஆனால் அச்செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொள்வதனூடாகவே மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்பதற்கமைவாக தொடர்ந்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதேவேளை கடந்த காலங்களில் நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுள் எட்டுமாகாணங்களில் மட்டுமே மாகாணசபைகளை நிறுவுவதற்கான உரிமை மக்களுக்கு கிடைத்திருந்தபோதும் வடக்குமாகாணத்திற்கு இம்முறையே அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.
பல ஆண்டுகாலம் இப்பகுதி மக்களுக்கு கிடைக்காதிருந்த அதிகாரமானது இம்முறை இம்மக்களுக்கு கிடைத்திருக்கின்றது. எனவே எதிர்வரும் 21ஆம் திகதி மக்கள் அளிக்கப்போகும் வாக்கின் மூலம் 22ஆம் திகதி அமையப்போகும் மாகாணசபைதான். இம்மாகாணத்தின் நிர்வாகத்தை செயற்படுத்தப்போகின்றது.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரதேச சபையை மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர்கள் இன்று வரை அதனை சரியாக செயற்படுத்தவில்லை. வெளிநாடுகளிலிருந்து நிதியைப்பெற்று பிரதேசங்களை அபிவிருத்திசெய்வோம் என்ற பொய்யான வாக்குறுதிகளை அவர்கள் மக்களுக்கு வழங்கி வாக்குகளைப் பெற்றார்கள்.
ஆனால் இதுவரை அவர்கள் எதையுமே செயற்படுத்தவில்லை. மாறாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த மக்களுக்கான மேம்பாட்டு செயற்பாடுகளையும் முடக்கும் வகையிலேயே அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. இதனால் பிரதேச சபையினால் கிடைக்கும் நன்மைகளையும் மக்கள் இழந்துவிட்டனர்.
எனவே இம்முறை நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலிலும் மக்கள் அவ்வாறான தவறுகளை இழைத்துவிடமாட்டார்கள் எனநாம் நம்புகின்றோம். எனவே இம்மக்கள் எதிர்வரும் 21ஆம் திகதி எடுக்கப்போகும் தீர்மானமானது மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்கும் பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் ஒட்டுமொத்த கிளிநொச்சி மாவட்டத்தின் சுபீட்சத்திற்குமான தீர்மானமாக இருக்கவேண்டும்.
அத்தீர்மானத்திலேயே இளம்தலைமுறையினரின் எதிர்காலமும் தங்கியுள்ளது. எனவே சுபீட்சமான எதிர்காலத்தைநோக்கி பயணிப்பதா இருண்ட யுகத்திற்கு செல்வதா என்பதை மக்களே தீர்மானிக்கவேண்டும். ஆகவே அந்த தீரமானம் சரியானதாக அமையுமிடத்து பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உட்பட நாம் அனைவரும் உங்களுடனிருந்து உங்களுக்காக தொடர்ந்தும் உழைக்கத்தயாராகவுள்ளோம்.
இங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கும் உற்பத்திதொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கும் உள்நாட்டு வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களின் செயற்பாடுகளை இப்பகுதிகளில் நிறுவுவதற்கும் நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
எனவே இப்பகுதி மக்களோடு இருந்து மக்களுக்காகவே உழைக்கும் மக்களின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களின் தலைமைத்துவத்துடன் இப்பகுதியியை தொடரந்தும் மேம்படுத்துவதற்கும் மக்களின் எதிர்காலத்தை சுபீட்சம் நிறைந்த பாதையில் முன்நகர்த்தி செல்வதற்கும் மக்கள் எதிர்வரும் 21ஆம்திகதி தமது வாக்குப்பலத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment