வடக்கில் தமது பொறுப்பில் ஏற்றுக்கொண்ட உள்ளூராட்சிமன்றங்களைக் கூட உரிய முறையில் கொண்டு நடத்த முடியாதுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாண சபையை கொண்டு நடத்த முடியாது. வட மாகாண சபையை கைப்பற்றவேண்டும் என்ற கூட்டமைப்பின் கனவு நனவாக மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வடக்கு மக்களின் தேவையை நிறைவேற்றவேண்டிய தேவை கூட்டமைப்புக்கு இல்லை. வடக்கு மக்களின் தேவையை நிறைவேற்றிவிட்டால் கூட்டமைப்பினால் அங்கு அரசியல் செய்ய முடியாது போய்விடும் என்றும் அமைசச்ர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்ததும் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தை நான் அந்த நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிடுவேன். அதன் பின்னர் தெரிவு செய்யப்படும் நிர்வாகம் அதனை செய்யவேண்டும். அதற்கு ொருத்தமானவர்களை மக்கள் தெரிவு செய்யவேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
வடக்குத் தேர்தல் நிலைவரம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்ததும் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தை நான் தெரிவு செய்யப்படும் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிடுவேன். அதன் பின்னர் நான் அதனை பொறுப்பேெற்று செய்யவேண்டிய அவசியம் இல்லை. மாகாண நிர்வாகத்தையும் அபிவிருத்தியையும் முன்னெடுக்கவே மாகாண சபைத் தேர்தலில் பிரதிநிதிகள் மக்களினால் தெரிவு செய்யப்படுகின்றனர். அவ்வாறு மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.
வெறுமனே இளைஞர்களை மீண்டும் இருண்ட யுகத்துக்கு அழைக்காமலும் மீண்டும் அவர்களை மோதலுக்குள தள்ளிவிடாமலும் மாகாண சபையை அபிவிருத்தி செய்ய சில தரப்பினர் முன்வரவேண்டும்.
ஏ-9 வீதி ரயில் வீதி மின்சாரத் திட்டங்கள் என்பனவற்றை மாகாண சபையினால் செய்ய முடியாது. அவற்றை தற்போது நாங்கள் மத்திய அரசாங்கத்தின் ஊடாக செய்துவிட்டோம். ஏனைய மாகாணங்களை அடகு வைத்துவிட்டே வடமாகாணத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து அபிவிருத்திப் பணிகளை செய்துவருகின்றோம்.
அந்தவகையில் மாகாணத்துக்குரிய சுகாதாரம் கல்வி வேலைவாய்ப்பு கைத்தொழில் விவசாயம் மீன்பிடித்துறை மாகாண வீதிகள் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தெரிவு செய்யப்படும் மாகாண நிர்வாகம் முன்னெடுக்கவேண்டும்.
இதேவேளை வட மாகாண சபையை கைப்பற்றவேண்டும் என்ற கூட்டமைப்பின் கனவு நனவாக மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. வடக்கு மக்கள் புத்திசாலிகள். எனவே அவர்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து மாகாணத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய நிர்வாகம் ஒன்றை தெரிவு செய்வார்கள் என்பது எமது நம்பிக்கையாகும்.
வடக்கு மக்களின் தமது பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதியும் இரளைஞர்களின் யுவதிகளுக்கான வளமான எதிர்காலம் கருதியும் கூட்டமைப்பினரை வடக்கில் தெரிவு செய்யமாட்டார்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
இது இவ்வாறு இருக்க வடக்கில் தமது பொறுப்பில் ஏற்றுக்கொண்ட உள்ளூராட்சிமன்றங்களைக் கூட உரிய முறையில் கொண்டு நடத்த முடியாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. இந்நிலையில் கூட்டமைப்பினால் பினால் வடக்கு மாகாண சபையை நடத்த முடியாது. இதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
காரணம் வடக்கு மக்களுக்கு சேவை செய்யவேண்டிய தேவை கூட்டமைப்புக்கு இல்லை. அவர்கள் வேறு சில தரப்பினருக்கு சேவை செய்துகொண்டிருக்கின்றனர். எனவே இது தொடர்பில் வடக்கு மக்கள் தெளிவாக சிந்திக்கவேண்டியது அவசியமாகும்.
மேலும் வடக்கு மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டால் கூட்டமைப்பினால் அங்கு அரசியல் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். எனவே அவர்கள் வடக்கு மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக்கொள்ள மாட்டார்கள் என்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment