Home » » தபால் மூல வாக்காளிக்காளர்களின் 26 ஆயிரத்து 232 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

தபால் மூல வாக்காளிக்காளர்களின் 26 ஆயிரத்து 232 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்திருந்தவர்களில் 26 ஆயிரத்து 232 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது விண்ணப்பித்த எண்ணிக்கையில் 19 சத வீதம் எனவும் கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பெருந்தொகையான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை, இலங்கையின் தேர்தல் முறையில் காணப்படும் குழப்பத்தை வெளிகாட்டுவதாக  கபே அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பத்தவர்களின் 499 பேர் விண்ணப்பங்களில் கையெழுத்திடவில்லை. அத்துடன் 13 ஆயிரத்து 135 பேர் விண்ணப்பங்களில் தவறான தகவல்களை முன்வைத்துள்ளனர்.

அரச ஊழியர்களில் 499 பேர் விண்ணப்பங்களில் கையெழுத்திடாது அதனை சமர்பித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

அது மட்டுமல்லாது தாம் வசிக்கும் இடம், தேர்தல் தொகுதி போன்ற பல விடயங்களை அவர்கள் தவறாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயங்களை அரச ஊழியர்களால் சரியாக குறிப்பிட முடியவில்லை என்றால், சமூகத்தில் கல்வி அறிவில் குறைந்தவர்கள் எப்படி தமது வாக்குரிமையை பாதுகாத்து கொள்ள முடியும் என கபே அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com