அத்துடன் இதுவரைக்கும் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக 430 முறைப்பாடுகள் கிடைக்கப் பெ றுள்ளதாகவும் அவ்வலையமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக அவ்வலையமைப்பு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 21ஆம் திகதி வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. ஆகவே தேர்தல் வன்முறை சம்பவங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதன்படி கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் 14 வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
அத்துடன் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக 430 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. மேற்படி முறைப்பாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பாக 190 முறைப்பாடுகளும் அரச உடைமைகள் மற்றும் அதிகாரங்கள் பிரயோகித்தமை தொடர்பாக 113 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 40 கிடைக்க பெற்றுள்ளன.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற 14 வன்முறை சம்பவங்களில் கண்டி மாவட்ட ஐ. தே. க. வேட்பாளர் லலித் ரணராஜாவின் காரியாலயத்தின் மீது கெப் வண்டியில் வந்த இனந்தெரியாத சிலர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளமை தொடர்பான முறைப்பாடுகளும் அடங்குகின்றன.
இதேவேளை குருநாகல் மாவட்டத்தின் மக்கள் விடுதலை முன்னணியில் இரண்டு காரியாலயங்களுக்கு இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
அத்துடன் மாத்தளை நகரில் நேற்று முன்தினம் ஒரு மணியளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் சின்தன ஏக்கநாயக்கவின் ஆதரவாளர்களுக்குமிடையில் மோதல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் மேற்படி முறைப்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கையை பொலிஸார் மற்றும் தேர்தல் செயலகம் எடுக்க வேண்டுமென அவ்வலையமைப்பு வலியுறுத்தியுள்ளது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment