வடக்கில் இராணுவத்தை முழுமையாக முகாம்களில் அடைக்க வேண்டும் என்ற கூட்டமைப்பின் தலைவர்
சம்பந்தனின் கருத்தை நிராகரிக்கின்றோம் . அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித் தார் .
அதேவேளை இராணுவம் சிவில் நிருவாகத்தில் தலையிடுவது தடுக்கப்பட வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார் .
இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் கருத்து தெரிவிக்கையில் , கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதையே தனது வேலையாக கொண்டுள்ளார் .
வடபகுதியில் உள்ள இராணுவத்தினர் அனைவரையும் முகாம்களுக்குள் அடைப்பது என்பது முடியாத காரியம் . வடக்கின் பாதுகாப்பிற்கு இராணுவத்தினரின் பிரசன்னம் அத்தியாவசியமானதாகும் .
ஆனால் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து காணப்படுகிறது . இதனை ஏற்றுக்கொள்ள முடியாது இதனை இல்லாது செய்ய வேண்டும் .
அதேவேளை இராணுவத்தினர் அரச சார்பு வேட்பாளர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதாகவும் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார் .
இது தொடர்பாக தற்போது எதனையும் கூற முடியாது . நான் தற்போது யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன் . இதன்போது சம்பந்தனின் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வேன் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார் .





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment