தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில்
இன்று முற்பகல் 11 மணிக்கு விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அக் கட்சி சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு கூட்டமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்ட விசேட கடிதம் தொடர்பாகவும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment