Home » » தேர்தல் கடமைகளுக்காக யாழ். தேர்தல் அலுவலகத்திற்கு வாகனங்களை வழங்காமல் உயர் அதிகாரிகள் இழுத்தடிப்பு.

தேர்தல் கடமைகளுக்காக யாழ். தேர்தல் அலுவலகத்திற்கு வாகனங்களை வழங்காமல் உயர் அதிகாரிகள் இழுத்தடிப்பு.

யாழிலுள்ள அரச திணைக்களங்களில் பாவனையிலுள்ள வாகனங்களை வடமாகாண சபைத் தேர்தல் கடமைகளுக்காக யாழ் . மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வழங்காது குறித்த திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இழுத்தடிப்புச் செய்கிறார்கள் . இன்று பிற்பகல் 12 மணி வரை வாகனங்கள் தேர்தல் அலுவலகத்திற்கு வழங்கப்படவில்லையென்றால் பொலிஸாரின் உதவியுடன் குறித்த திணைக்களங்களிலுள்ள வாகனங்கள் வலுக்கட்டாயமாக எடுத்துவரப்படும் என்று யாழ் . மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார் . 

 வட மாகாண தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாகக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார் . இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , யாழ் . மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பாவனைக்கு உட்படுத்தப்படுகின்ற வாகனங்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவது வழமையாகும் . அந்த வகையில் வடமாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக வாகனங்கள் தேவை என்பதால் குறித்த திணைக்களங்களுக்கு யாழ் . மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்கு வாகனங்கள் தேவை என்பது தொடர்பாக திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு நான் அறிவித்திருந்தேன் . 

 ஆனால் குறித்த அதிகாரிகள் இதுவரை வாகனங்களை எம்மிடம் கையளிக்கவில்லை . அதற்கான காரணங்களையும் ஒழுங்கான முறையில் எமக்குத் தெரியப்படுத்தாமல் இழுத்தடிப்புச் செய்கிறார்கள் . சாரதிகள்இ இன்னமும் வாகனங்கள் பழுதாகியுள்ளது எனச் சாட்டுக்களைக் கூறுகின்றனர் . எனவேஇ இவர்களின் இப்படியான செயற்பாட்டை யாழ் . மாவட்டத் தேர்தல் அலுவலகம் வன்மையாகக் கண்டிப்பதோடு இன்று பிற்பகல் 12 மணிக்குள் வாகனங்களை அதிகாரிகள் ஒப்படைக்காமல் விட்டால் குறித்த திணைக்களத்திற்கு உள்ள வாகன ங்களை பொலிஸாரின் உதவியுடன் வலுக் கட்டாயமாக எடுத்து வரப்படும் என்றார் .


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com