Home » » இரா­ணுவத் தலை­யீ­டுகள் இருக்­கு­மட்டும் வடக்கில் நீதி­யான தேர்தல் நடை­பெ­றாது. விக்கி­னேஸ்­வரன்

இரா­ணுவத் தலை­யீ­டுகள் இருக்­கு­மட்டும் வடக்கில் நீதி­யான தேர்தல் நடை­பெ­றாது. விக்கி­னேஸ்­வரன்

வட மாகாணத்தில் ஒரு தேர்தல் உண்மையாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டுமாக இருந்தால் இராணுவத்தினர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தலையிடுவதையும் நிறுத்த வேண்டியது அவசியமானதாகும் . இதனை நாம் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள பொது நலவாய அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சி . விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் . 

 இணுவில் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம் செ . இலகுநாதன் தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது . இக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் . அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் , தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் இராணுவத்தினரின் பிரச்சினை என்ன என்பதை நாம் தெளிவாக ஆதாரத்துடன் கூறினோம் .

 கடந்த செவ்வாய்க்கிழமை கூட அரசாங்கக் கட்சியில் இராணுவத்தின் அனுசரணையுடன் தேர்தலில் போட்டியிடும் நால்வரின் கட்டவுட்டுக்களை நிறுவ முற்பட்ட இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு மேஜரின் தலைமையில் வந்த இராணுவத்தினர் கட்டவுட்டக்களை நிறுவ முற்பட்டதாகவும் அதனைத் தடுக்க பொலிஸார் முனைந்த போது அதை மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் செய்வதாகவும் அதில் தலையிட வேண்டாம் எனவும் மேஜர் குறிப்பிட்ட விடயத்தை பொலிஸார் தமது குறிப்பில் எழுதியுள்ளார்கள் .

 அதனைச் சென்று பார்த்து உறுதிப்படுத்துங்கள் என்று தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம் . இன்றும் கூட இராணுவப் புலனாய்வாளர்கள் தெல்லிப்பழை மல்லாகம் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று இறந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றார்கள் . இது கூட இராணுவத்தினரின் கடமையல்ல . இந்தளவுக்கு பொலிஸாரை கடமை செய்ய விடாது இராணுவத்தினரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன . 

இவர்கள் பின்னர் இறந்தவர்களின் வாக்குகளையும் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களின் வாக்குளையும் கூட தேர்தலில் முறையற்ற முறையில் பயன்படுத்தலாம் எனவும் கண்காணிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம் . முன்னைய தேர்தல்களின் போதும் இத்தகைய நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளதுடன் பொது மக்களை வாக்களிக்கவிடாது தடுக்கும் செயல்களும் இடம் பெற்றுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம் . மக்களை வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லவிடாது இடையில் தடுப்பது மற்றும் தேசிய அடையாள அட்டைகள் , வாக்காளர் அட்டைகளைப் பறிப்பது போன்ற செயல்கள் மூலம் பொது மக்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் செயல்பாடுகளும் கடந்த தேர்தலில் இடம் பெற்றதையும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம் . 

 தேர்தல் சம்பந்தமாக இடம் பெறும் அசம்பாவிதங்களையும் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதையும் உடனுக்குடன் எமக்கு அறியத்தாருங்கள் என அவர்கள் எம்மிடம் கூறியுள்ளார்கள் . தாம் அது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் அதனை அறிக்கையாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்கள் . இவர்கள் தயாரிக்கும் தேர்தல் சம்பந்தமான அறிக்கை பொது நலவாய நாடுகளின் அமையத்தின் மூலம் தொகுக்கப்பட்டு சர்வதேச நாடுகளின் கவனத்திற்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் . பொது மக்கள் இத்தகைய சம்பவங்கள் இடம் பெறும் சந்தர்ப்பத்தில் எமக்கு உடனடியாக அறியத்தந்தால் நாம் அதனை உரிய இடத்திற்குத் தெரிவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் . இராணுவத்தினர் எமது மண்ணில் நிலை கொள்ளத்தான் விரும்புகின்றனர் .

 ஏற்கனவே சுமார் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் எமது மண்ணில் நிலை கொண்டுள்ள நிலையில் மீண்டும் இங்கு பயங்கரவாதம் தோன்றுவதாகக் கூறி மேலும் படையினரை குவிக்கவேண்டும் என யாழ் . மாவட்ட இராணுவத் தளபதி அறிக்கை விடுத்துள்ளார் . தற்போது மூன்று நான்கு பேருக்கு ஒரு இராணுவம் என்ற அடிப்படையில் இராணுவத்தினர் வடக்கில் நிலை கொண்டுள்ளார்கள் . இந்நிலையில் மேலும் இராணுவத்தினரை இங்கு குவிக்கமுற்படுவது எம்மை அடக்கி ஆழவேண்டும் என்ற நிலைப்பாட்டினையே காட்டுகின்றது . சமஷ்டி அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் ஒரு இனம் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்வது என்பது எந்த வகையில் நாடு பிரிவதாக அமைய முடியும் .

 தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்வதில் அரசாங்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் உடன்பாடில்லை . இதனாலேயே சமஷ்டி என்றதும் கொதித்துப் போயுள்ளார்கள் . தமிழ் மக்கள் தமது கட்டுப்பாட்டில் இருந்து விடுபடக் கூடாது என்பதே அரசாங்கத்தினதும் சிங்கள மக்களின் பெரும்பான்மையினரின் எண்ணங்களும் சிந்தனையும் ஆகும் . எதிர்வரும் தேர்தலில் நாம் வெற்றி பெறுவதன் மூலம் சர்வதேசம் ஒன்றைப் புரிந்துகொள்ளும் . தமிழ் மக்களுடைய எண்ணங்கள் , சிந்தனைகள் என்னவென்பதையிட்டு அனைத்து வாக்காளர்களும் கட்டாயமாக வாக்களிக்கச் செல்லவேண்டும் . 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறும் என்ற எண்ணத்தில் வாக்களிக்கச் செல்லாது யாரும் இருந்துவிடக்கூடாது . அனைவரும் சென்று தமது கடமையை உரிய முறையில் செய்ய வேண்டும் . நீங்கள் எங்களுக்குத் தரும் பெரும்பான்மைப் பலத்துடன் நாம் உங்களுடைய கடமையைத் தொடர்ந்து நிறைவேற்ற பாடுபடுவோம் , செயல்படுவோம் என்றார் .


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com