Home » » அனந்தி சசிதரன் அரசாங்க கட்சிக்கு மாறிவிட்டதாக போலிப் பிரசாரம்! மக்கள் குழப்பமடைய வேண்டாம் என அனந்தி அறிவிப்பு

அனந்தி சசிதரன் அரசாங்க கட்சிக்கு மாறிவிட்டதாக போலிப் பிரசாரம்! மக்கள் குழப்பமடைய வேண்டாம் என அனந்தி அறிவிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரன் அரசாங்க கட்சிக்கு மாறிவிட்டதாக தலைப்புச் செய்தியுடன் போலி உதயன் பத்திரிகை இன்று காலை இனந்தெரியாத நபர்களினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் எனவும், மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அனந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து தெரியவருவதாவது, இன்றைய தினம் அதிகாலை 3மணியளவில் உதயன் பத்திரிகையினைப் போன்றே மிகவும் போலியாக பதிப்பிக்கப்பட்ட பத்திரிகைகள் யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. 

 அந்த பத்திரிகையில் உதயன் பத்திரிகையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் வர்த்தக நிலையத்தினர் அவற்றைப் பெற்றுள்ளனர். பின்னர் அவர்களுக்கு ஒருவாறாக விடயம் விளங்கிய நிலையில், அதிகாலை 3.30 மணிக்கெல்லாம், உதயன் அலுவலகத்திற்கு விடயம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உதயன் பணியாளர்கள் விரைந்து அந்த போலிப் பத்திரிகைகளை குறித்த வர்த்தக நிலையங்களிலிருந்து முழுமையாக அகற்றியுள்ளனர். குறித்த பத்திரிகையில் நேற்று அதிகாலை அனந்தி வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்தும், எழிலன் இனந்தெரியாத நபர்களினால் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்தும் உடனடியாக அவர் அரசாங்க கட்சிக்கு மாறியுள்ளதாக தலைப்பு செய்தி போடப்பட்டுள்ளது. 

 எனினும் தற்போது பாதுகாப்பான இடம் ஒன்றில் தங்கியிருக்கும் அனந்தி, அதனை முழுமையாக மறுத்துள்ளதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பதாகவும், இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் என்றும் மக்களிடம் கேட்குமாறு அவர் ஊடகங்களிடம் கேட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com