Home » , » தேர்தலில் சுயநிர்ணய உரிமையை கூட்டமைப்பினர் கோருவது தவறு : வடக்கு தேர்தல் முடிவினை அறிவேன் என்கிறார் ஜனாதிபதி

தேர்தலில் சுயநிர்ணய உரிமையை கூட்டமைப்பினர் கோருவது தவறு : வடக்கு தேர்தல் முடிவினை அறிவேன் என்கிறார் ஜனாதிபதி

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் சுய­நிர்­ணய உரிமை குறித்தும் தனி­நாடு குறித்தும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது நல்­ல­தொரு விட­ய­மல்ல. இது தவ­றான செயற்­பா­டாகும்.

 வடக்கு மாகா­ண­மக்கள் முப்­பது வரு­ட­கால யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மக்­களின் வாழ்­வா­தாரம் குறித்து பேசாத கூட்­ட­மைப்பு சுய­நிர்­ணய உரி­மையை மட்டும் பேசு­வது தவ­றா­ன­தாகும். கூட்­ட­மைப்பின் இத்­த­கைய போக்கு கவலை தரு­கின்­றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். வட­மா­கா­ண­சபை தேர்­தலை நடத்­து­கின்­ற­மையே எமக்கு பெரிய வெற்­றி­யாகும். வட­மா­கா­ண­சபை தேர்­தலின் முடிவு எனக்கு நன்கு தெரியும்.

 அதனை நான் இப்­போது கூற­மாட்டேன். அவ்­வாறு கூறினால் அதனை நீங்கள் பெரிய எழுத்­துக்­களில் போட்­டு­வி­டு­வீர்கள் முன்­ன­ரை­விட வடக்குத் தேர்­தலில் கூடி­ய­ளவு வாக்­குக்­களை பெற்­றாலே அது எமக்கு பெரிய வெற்­றி­யாகும். முன்­ன­ரை­விட நல்­ல­தொரு நிலை அங்கு காணப்­ப­டு­கின்­றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 தேசிய தமிழ்ப் பத்­தி­ரி­­கைகளின் ஆசி­ரி­யர்­களை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று சந்­தித்து ஜனா­தி­பதி கலந்­து­ரை­யா­டினார். இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com