Home » , » ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்.விஜயம்

ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்.விஜயம்

வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காகவும், பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவும் எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ் . குடாநாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். குடாநாட்டுக்கு வருகை தரவுள்ள இவர் சங்கானைப் பொதுச்சந்தையில் காலை 10 மணிக்கு வர்த்தகர்களைச் சந்திக்கவுள்ள அதேவேளை 10.30 மணிக்கு காரைநகர் ஆலடிப் பகுதியில் மக்களைச் சந்திக்கவுள்ளார்.

 இன்று நண்பகல் 12 மணிக்கு வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டு அங்கும் மக்களைச் சந்திக்கவுள்ளார். இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சாவகச்சேரி, கொடிகாமம் ஆகிய பகுதிகளிலும் 3.30 மணிக்கு யாழ் . பேருந்து நிலையத்திலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார்.

 இதேவேளை மாலை 4.30 மணிக்கு யாழ். ஆயரை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

 மாலை 5 மணிக்கு யாழ். ரில்கோ விடுதியில் ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ள அவர், மாலை 6 மணிக்கு நல்லூர் பூங்காவில் ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டமொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com