தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்குத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து நாங்கள் பதற்றமடையவில்லை. அதேவேளை ஆச்சரியமடையவுமில்லை. காரணம் அவர்கள் வட்டுக்கோட்டை பிரடகனத்தைக் கூட வெளியிட்டவர்கள். ஈழம் பிரகடனம் செய்யப்போவதாக பிரபாகரன் மிகப்பெரிய செய்தியாளர் மாநாட்டையே நடத்தினார். ஆனால் இறுதியில் எல்லாம் மாயையாகவே அமைந்தன. எவ்வாறெனினும் இது எமக்கு அச்சுறுத்தலோ அழுத்தமோ இல்லை என்பதனை தெரிவிக்கின்றேன் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நவநீதம்பிள்ளையை திருமணம் செய்வதற்கு விருப்பம் என்ற யோசனையை அமைச்சர் ஒருவர் முன்வைத்தமை தொடர்பில் நான் தனிப்பட்ட ரீதியிலும் அமைச்சரவையின் சார்பிலும் வருத்தத்தையும் கவலையையும் தெரிவிக்கின்றேன். இது தவறானது. அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனறும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நவநீதம்பிள்ளையை திருமணம் செய்வதற்கு விருப்பம் என்ற யோசனையை அமைச்சர் ஒருவர் முன்வைத்தமை தொடர்பில் நான் தனிப்பட்ட ரீதியிலும் அமைச்சரவையின் சார்பிலும் வருத்தத்தையும் கவலையையும் தெரிவிக்கின்றேன். இது தவறானது. அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனறும் அமைச்சர் குறிப்பிட்டார்.சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment